Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 20, 2023

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிப்பு - காரணத்தை அறிய இணையதளம் அறிமுகம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 56.50 லட்சம் பேரும் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள, புதிய இணையதளத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணத்துடன் நேற்று முன்தினம் முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விண்ணப்பம் ஏற்கப்படாததற்கான காரணத்தை அறிந்துகொள்ளும் வகையில், https://kmut.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தங்களின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, கைபேசிக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பயன்படுத்தி காரணத்தை அறிந்து கொள்ளலாம். அதன்பின், உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, நேற்று பலரும் இந்த இணையதளத்தை பயன்படுத்தியதால் முடங்கியது. அதன்பிறகு, அதிகாரிகள் இணையதளத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதற்கிடையே, குறுஞ்செய்தி பெறப்பட்டவர்கள், நிராகரிப்புக்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு, இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News