Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு உயர்த்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இதை தொடர்ந்து இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.20, 000 ஊதியமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு அரசு கலை, அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment