Join THAMIZHKADAL WhatsApp Groups
வெந்தயக் கீரையில் வைட்டமின் எ, பி சத்துக்கள் காணப்படுகிறது. இந்த கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சரி செய்யலாம். மேலும் வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு, மற்றும் வயிற்று கோளாறுகளை குணப்படுத்தலாம்.
நம் உடலில் காணப்படும் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது. மேலும் அஜீரண கோளாறுகளை குறையச் செய்கிறது. இருமல், கபம், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைக்கிறது.
சோம்பலாக இருப்பவர்கள் சுறுசுறுப்பாக மாற வேண்டுமானால் இந்த கீரையை சாப்பிடலாம். இனி வெந்தய கீரையை பயன்படுத்தி எப்படி சூப் செய்வது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - சிறிதளவு
காய்ச்சிய பால் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
சோள மாவு - 1 தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
வெண்ணெய் - சிறிதளவு
மிளகுப்பொடி- தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலாவது வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம், தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். அதன்பின் கடாயில் சிறிதளவு வெண்ணெயை ஊற்றி வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
பின்பு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதிக்கும் போது வெந்தயக்கீரை, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வேக வைக்கவேண்டும். வெந்ததும் காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சேர்க்க வேண்டும்.
இது நன்கு அதனுடன் கலந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விடவேண்டும். பின்பு உப்பு, மிளகுப்பொடி தேவையான அளவு சேர்த்து கொள்ளுங்கள். அவ்வளவு தான், சத்தான வெந்தய கீரை சூப் தயார்.
No comments:
Post a Comment