Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகவே வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும் என்று தான் கூறுவார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் இரட்டை பழங்கள் வந்தால் அதை சாப்பிடுவதை மறுத்து விடுகிறார்கள்.
அதற்கான காரணம் பற்றி யோசித்தது உண்டா? இல்லையேல் அது பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
இரட்டை வாழைப்பழம் சாப்பிட்டால் இரட்டை குழந்தை பிறக்கும் என்பது ஒரு மூடநம்பிக்கை தான். நாம் சாப்பிடும் உணவு எல்லாம் செரித்த பின் இரைப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல் வழியாக வெளியேறும். குழந்தை பிறப்பது கருப்பையில்! கருப்பைக்கும் இரைப்பைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு இருக்கையில் வாழைப்பழமே சாப்பிடாதவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. இதற்கு என்ன காரணத்தை கூற முடியும்? இரட்டைப் பழத்தைச் சாப்பிடுகிறவர்களுக்கெல்லாம் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதில்லை.
அதற்கு பயம் இல்லாமல் இரட்டை வாழைப்பழத்தை சாப்பிடலாம். அதை ஒதுக்கி வைக்க கூடாது. இரட்டை குழந்தை பிறக்கின்றது என்று குழந்தையை ஒதுக்கி வைப்பீர்களா?
அவ்வாறு தான் வாழைப்பழமும். இதனால் உடலுக்கு எந்த தீமையும் ஏற்படாது என்பது அறிவியர்களின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment