Join THAMIZHKADAL WhatsApp Groups
பருவமழை தொடங்க உள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு அம்சங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலங்களில் மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மழையின்போது மிகுந்த ஈரப்பதத்துடன் உள்ள பள்ளி சுற்றுச்சுவரின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறைகள், கழிவறைகள் சேதமடைந்து இருந்தால் அவைகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பள்ளியில் மின் இணைப்புகள் சரியாக உள்ளதா?, மின்கசிவு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment