Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் இனத்தின் மீது அடுத்தடுத்த தாக்குதலா!!! - தேர்வு நிலைக்கு TET தேர்ச்சி அவசியமா??? - தேசிய ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசு எந்த வித அரசாணையும் பிறப்பிக்காத நிலையில் ,நீதிமன்ற தீர்ப்பில் பதவி உயர்வுக்கு தான் தகுதித்தேர்வு தேவை என்று மட்டும் கூறியுள்ள நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கோரியதை ஏற்று 22-6-23 இல் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உறுதி அளித்தததற்கு மாறாக கூடுதலாக தன்னிச்சையாக தேர்வு நிலை பேற ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி வேண்டும் எனச் சேர்த்த கோவை மாவட்டக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை தேசிய ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு இதர இனங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக தேர்வு நிலை வழங்கி உத்தரவு வழங்க கோருகிறது
மு கந்தசாமி,
மாநில பொதுச்செயலாளர், தேசிய ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு
No comments:
Post a Comment