Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 4, 2023

சூரிய பெயர்ச்சியால் குபேர வாழ்க்கை பெறப்போகும் ராசிகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவதற்கு சூரிய பகவான் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவானின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று சிம்ம ராசியை விட்டு கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போவதாக கூறப்படுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம். ரிஷப ராசி சூரிய பகவானால் அனைத்து விதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. தனயோகம் உங்களை தேடி வரும். நிதி சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கடக ராசி சூரிய பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகக் போகின்றது வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். பல்வேறு விதமான விஷயங்களில் உங்களுக்கு உயர்வு கிடைக்கும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். அனைத்து விதமான பலன்களையும் சூரிய பகவான் உங்களுக்கு கொடுப்பார். விருச்சிக ராசி சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்டங்களை பெற்று தரப்போகின்றது. வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சிறு தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. மகர ராசி சூரியனின் பிரகாசமான பார்வை உங்கள் ராசியின் மீது விழுகின்றது. அதனால் பெரிய அளவில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகின்றது. புதிதாக வீடு மற்றும் மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அடுத்த கட்டம் நகரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சூரிய பகவானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News