Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய அறிவியல் கழகம் (IISc) GATE 2024 க்கான பதிவு காலக்கெடுவை அக்டோபர் 5, 2023 வரை நீட்டித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.
GATE 2024 விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்:
“GATE 2024 குழு தாமதக் கட்டணம் இல்லாமல் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 5, 2023 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், இந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவின் கடைசி தருணம் வரை காத்திருக்க வேண்டாம்” என்று IISc தெரிவித்துள்ளது.
இன்ஜினியரிங் பட்டதாரி திறன் தேர்வுக்கு இன்னும் விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்கள், gate2024.iisc.ac.in என்ற IISc GATEன் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் தங்களின் பதிவுகளை அக்டோபர் 5 வரை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 இன் இன்ஜினியரிங் பட்டதாரி திறன் தேர்வுக்கு செப்டம்பர் 29 ஆம் தேதி 1.37 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ATE 2024 தேர்வு பிப்ரவரி 3-4 மற்றும் 10-11, 2024 இல் திட்டமிடப்பட்டுள்ளது, அட்மிட் கார்டுகள் ஜனவரி 3, 2024 அன்று வழங்கப்படும்.
No comments:
Post a Comment