Tuesday, September 19, 2023

ITI முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு..! மொத்தம் 206 காலியிடங்கள்..!

அணு எரிபொருள் வளாகம் (NFC) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ITI Apprentices பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 206 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கான விண்ணப்பங்கள் 30.09.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவியின் பெயர்: ITI Apprentices

காலிப்பணியிடங்கள்: 206

கல்வி தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.

ஊக்கத்தொகை:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Merit List மற்றும் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

பொது பிரிவு/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 700 ரூபாயும், எஸ்சி/எஸ்சி /மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கான விண்ணப்பங்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2023

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News