Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 4, 2023

LKG, UKG சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 பிழைப்பூதியம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் பரிட்சார்த்த முறையில் தொடங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ரூ.5000 விதம் பிழைப்பூதியம் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் வழங்க கூறப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் மற்றும் ஜூலை 2023 சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கப்பட்டது.
தற்பொழுது ஆகஸ்டு 2023 மாதத்திற்கான பிழைப்பூதியம் சிறப்பாசிரியர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து கேட்பு பட்டியல் பெறப்பட்டு இணைப்பில் உள்ளவாறு மாவட்டங்களுக்கு‌ பிழைப்பூதியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை மாவட்ட இதர செலவின வங்கி கணக்கிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை மாவட்டங்களிலிருந்து நேரடியாக சிறப்பாசிரியர்களின் வங்கி கணக்கிற்கு ECS மூலமாக மாவட்ட இதர செலவின வங்கி கணக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்களிடமிருந்து சிறப்பாசிரியர்களுக்கான ஆகஸ்டு மாதத்திற்கான பிழைப்பூதியம் கேட்புப் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு அதற்கேற்ப சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் விடுவிக்கப்பட வேண்டும்.

சிறப்பாசிரியர்களுக்கு ஆகஸ்டு 2023 மாதத்திற்கான பிழைப்பூதியம் மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் உடனடியாக வழங்க உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News