Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 7, 2023

பட்டப்படிப்பு முடித்தால் போதும்! எஸ்.பி.ஐ வங்கியில் 2000 காலி பணியிடங்கள் அறிவிப்பு

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2000 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. எஸ்.பி.ஐ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த வங்கிக்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன. மற்ற பொதுத்துறை வங்கிகளை போல எஸ்.பி.ஐ வங்கியில் பணியாற்றும் ஊழியர்களும் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கி பணி தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில், எஸ்.பி.ஐ வங்கியில் ப்ரோபேசனரி ஆபிஸர் அல்லது துணை மேலாளர் பதவிக்கு 2000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்.டி/ பிரிவினருக்கு 5 ஆண்டுகளும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும். மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் 750 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேர்முக தேர்வு நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 63 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். 

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.பி.ஐ. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

No comments:

Post a Comment