Join THAMIZHKADAL WhatsApp Groups
தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் தொடர்பான செய்தி வெளியீடு..
அரசு பணிகளுக்கான நேர்முக தேர்வு முறையில், தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம், புதியமாற்றங்களை செய்து உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பணியாளர்களை தேர்வு செய்வதில், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த, பல்வேறு மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளன.அதன்படி, நேர்முக தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படும்
விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி போன்ற அடையாளங்கள்
மறைக்கப்படும்.அதற்கு பதில், விண்ணப்பதாரர்களுக்கு ஏ, பி, சி, டி என்ற ஆங்கில எழுத்து முறைப்படி, நேர்காணல் அறையில் அனுமதிக்கப்படுவர்.
இதில் வரிசை மாற்று முறையும் பின்பற்றப்படும். இதனால், விண்ணப்பதாரர்கள் மீது,
சார்புத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் நீக்கப்படும்; வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TNPSC Press News - 15.09.2023 : Click here
No comments:
Post a Comment