அரசு தொடக்க பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள், 1,000 பேரை நியமிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
அரசு பள்ளிகளில், 13,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில், 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போட்டி தேர்வு வழியே நிரப்பப்பட உள்ளன.
இந்நிலையில், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 1,000 ஆசிரியர்களை, தற்காலிகமாக நியமிக்க தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. பள்ளி மேலாண்மை குழு வழியாக இந்த நியமனத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனால், தொடக்க பள்ளிகளில் ஓராசிரியர் உள்ள பள்ளிகளில், கூடுதலாக ஒரு ஆசிரியர் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment