Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 19, 2023

1038 பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாளர் மாநில காப்பீட்டு கழகம் செயல்பட்டு வருகிறது.

அதன்படி ESI அலுவலகத்தில் உள்ள 1,038 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளீயிடப்பட்டுள்ளது. பணியிடங்கள் விவரம், கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

பதவியின் பெயர்:

இசிஜி டெக்னிஷியன், ஒ.டி அஸ்சிஸ்டண்ட், பார்மாசிஸ்ட் (அலோபதி), பார்மாசிஸ்ட் (ஆயுர்வேதா), ரேடியோகிராபர், ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலாஜிஸ்ட்

காலி பணியிடங்கள்: 1,038

கல்வி தகுதி:

இசிஜி டெக்னிஷியன் பணியிடத்திற்கு 2 ஆண்டு டிப்ளமோ பிரிவில் இசிஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஜூனியர் ரேடியோகிராபர் பணிக்கு 2 ஆண்டு டிப்ளமோ ரோடியோகிராபி . ஜூனியர்மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் விண்ணப்பத்தாரர்கள் 12ம் வகுப்பை சயின்ஸ் பாடங்களுடன் முடித்து டிப்ளமோ மெடிக்கல் லேபராட்டரி டெக்னாலஜிஸ்ட் படித்து இருக்க வேண்டும்.

ஓடி அசிஸ்டென்ட் பணிக்கு 10, பிளஸ்2 படிப்புடன் ஓராண்டு ஆபரேஷன் தியேட்டர் பணியில் அனுபவம் கொண்டிருப்பதோடு பார்மசிஸ்ட்(அலோபதி) பணிக்கு பார்மஸி பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ பார்மஸி முடித்திருக்க வேண்டும். பார்மசிஸ்ட்(ஆயுர்வேதம்) 12ம் வகுப்பு பாஸாகி பி.பார்ம் படிப்பில் ஆயுர்வேத படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ ஆயுர்வேத பார்முஸி படிப்பை முடித்து 3 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ரேடியோகிராபர் பணிக்கு 12ம் வகுப்பு முடித்து டிப்ளமோ ரேடியோகிராபி படிப்பை முடித்து ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது : 18 முதல் 25 வரை குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

இசிஜி டெக்னிஷியன் - ரூ.25,500 - 81,100
ஜூனியர் ரேடியோகிராபர் - ரூ.21,700 - 69,100
ஓடி அஸ்சிஸ்டண்ட் - ரூ.21,700 - 69,100
பார்மாசிஸ்ட் (ஆயுர்வேதா) - ரூ.29,200 - 92,300
பார்மாசிஸ்ட் (அலோபதி) - ரூ.29,200 - 92,300
ரேடியோகிராபர் - ரூ.29,200 - 92,300
ஜூனியர் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் - ரூ.29,200 - ரூ.92,300

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி / எஸ்.டி உட்பட பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.



தேர்வு செய்யும் முறை:

நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதள https://esic.gov.in/recruitments/ மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.10.2023

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News