Join THAMIZHKADAL WhatsApp Groups
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12500 ஊதிய உயர்வு அளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
சென்னை டி.பி.ஐ வளாகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதன்படி 2013 ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது நிரந்தர பணி வழங்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கடந்து ஒரு வாரமாக ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
'சம வேலை சம ஊதியம் வழங்கும் கோரிக்கை முரண்பாடு மூன்று குழு அமைக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு ஆசிரியர்கள் பள்ளி செல்ல வேண்டும். TET தேர்விற்கு உச்ச வயது 53 உயர்த்த உள்ளோம். சொல்லாத வாக்குறிதிகளை நிறைவேற்றி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கூடுதல் நிதியாக இருந்தாலும் சரியான செயல்பாடுகளை செய்து வருகிறோம். எனவே ஆசிரியர்கள் .. உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள் உங்கள் தேவையை அரசு பூர்த்தி செய்யும்.
மேலும் மாத ஊதியம் 2500 ரூபாயை உயர்த்தி 12,500 ரூபாயக ஊதிய உயர்வு பகுதி நேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். நிதிநிலைமை சரியாக சரியாக முதலமைச்சர் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்' என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment