தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் (ESIC) தமிழ்நாடு மண்டலத்தில் காலியாக உள்ள துணை மருத்துவ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ECG Technician
காலியிடங்களின் எண்ணிக்கை : 6
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Diploma in ECG படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30.10.2023 அன்று 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 25500- 81100
Junior Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 17
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Diploma in Radiography படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30.10.2023 அன்று 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 21,700- 69,100
Junior Medical Laboratory Technologist
காலியிடங்களின் எண்ணிக்கை : 15
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Diploma in Medical Laboratory Technologist படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 29200- 92300
OT Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 30.10.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 21,700- 69,100
Pharmacist (Allopathic)
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி : Degree in pharmacy/Sr. Secondary with Diploma in pharmacy படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30.10.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 29200- 92300
Pharmacist (Ayurveda)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Bachelor of Pharmacy in Ayurveda படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 29200- 92300
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Diploma or Certificate in Radiography படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 29200- 92300
வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் (Technical/ Professional Knowledge) இருந்து 50 வினாக்களும், பொது அறிவில் (General Awareness) இருந்து 10 வினாக்களும் திறனறிதலில் (General Intelligence) இருந்து 20 வினாக்களும் மற்றும் கணிதத்தில் (Arithmetic Ability) இருந்து 20 வினாக்களும் என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.esic.nic.in/recruitmentsஅல்லது https://ibpsonline.ibps.in/esicjan23/ என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.10.2023
விண்ணப்பக் கட்டணம் : SC/ST, பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளுக்கு ரூ 250, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.500
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறியhttps://www.esic.gov.in/attachments/recruitmentfile/c23c25a3dad3da105d441ef8844b022d.pdf என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.
No comments:
Post a Comment