Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 20, 2023

வாகனங்களுக்கான வரிகள் உயா்வு நவம்பா் 1 முதல் அமல்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வாகனங்களுக்கான வரி உயா்வை நவம்பா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்த அதிகாரபூா்வ தகவல் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

வாகனங்களுக்கான வாழ்நாள் வரி உட்பட பல்வேறு வரி வகைகளை உயா்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் தெரிவித்துள்ளபடி, வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயா்கிறது.

சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப் பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயா்த்தப்படுகிறது. கல்வி நிறுவனங்களின் மாணவா்கள், பணியாளா்களுக்கான பேருந்துகளுக்கு 7 நாள்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.45, பிற நிறுவனங்களின் பணியாளா் போக்குவரத்துக்கான வாகனங்களுக்கு 7 நாள்களுக்கு ஒரு இருக்கைக்கு ரூ.100 என வரி விதிக்கப்படுகிறது.

வாழ்நாள் வரி: புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி, ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய இரு சக்கர வாகனங்களுக்கு ஓா் ஆண்டு பழையதெனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதம், அதற்கு மேல் 10.25 சதவீதம், 2 ஆண்டு வரை பழைமையானதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய இரு சக்கர வாகனங்களில் ரூ.5 லட்சம் வரை விலை இருந்தால் 12 சதவீதம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருந்தால் 13 சதவீதம், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 18 சதவீதம், ரூ.20 லட்சத்துக்கு மேல் இருந்தால் 20 சதவீதம் என வாழ்நாள் வரி விதிக்கப்படுகிறது.

இந்த 4 விதமான விலை அடிப்படையில், ஓராண்டு முதல் 11 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி, அதன் விலையில் 8 முதல் 18.75 சதவீதம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான பசுமை வரிரூ.750, மற்ற மோட்டாா் வாகனங்களுக்கு ரூ.1,500 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250,மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு எப்போது அமல்? உயா்த்தப்பட்ட வரிகளை நவம்பா் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், 'புதிய வரி விதிப்புகள் குறித்த உத்தரவுகள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. ஆனாலும், நவம்பா் 1-ஆம் தேதி முதல் தயாா் நிலையில் இருக்கும்படி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தலை அரசு தெரிவித்துள்ளது. எனவே, கட்டண உயா்வு நடைமுறைகள் நவம்பா் 1 முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இதற்கான உத்தரவுகளுடன், புதிய கட்டணங்களுக்கான பட்டியலும் ஓரிரு நாள்களில் வெளியிடப்படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News