Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், மேலும் கூடுதலாக ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சேர்க்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு பள்ளிகளில் 15000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் முதல் கட்டமாக 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த நிலையில் மேலும் ஆயிரம் பணியிடங்கள் சேர்க்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பி.ஏ., / பி.எஸ்ஸி-யில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் தொடர்புடைய இளங்கலை கல்வியியல் பட்டம் ( Bachelor in Education (B.Ed.) பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2ல் விண்ணப்பிக்கும் பாடத்திற்கு ஏற்ற விருப்பப்பாடத்துடன் (Optional subject) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
இந்த பதவிக்கு கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஆசிரியர் தகுதித் தேர்வு II-ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.
இடைநிலை ஆசிரியர் தேர்வு: இதற்கிடையே, 2000க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பு தனியாக வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.8 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment