வாக்கிய பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 8ம் தேதி (புரட்டாசி 21) அன்று ராகு கேது பெயர்ச்சி நடந்தது. இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகினர்.
நிழல் கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு கிடைக்கும் சுருக்கமான பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: மேஷ ராசியிலிருந்து ராகு, மீன ராசிக்கு செல்வதால் மேஷ ராசி அன்பர்களுக்கு பொதுவாக நல்ல பலன்களை கொடுக்கும். இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். நிலுவையில் நின்ற வேலைகள் முடிவு பெறும். நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடும் காலம் இது.
ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். சொந்த தொழிலில் செய்பவர்களுக்கு வருமானம் பெருகும். குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்புள்ளது.
மிதுனம்: ராகு கேது பெயர்ச்சியால் மிதுன ராசி அன்பர்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். மாணவர்கள் நல்ல ஆர்வத்துடன் கல்வி பயில்வீர்கள். நீங்கள் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்களை பெறப்போகும் நேரம் இது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் இருந்த இடைவெளி குறையும். இதுவரை இல்லாத உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
சிம்மம்: சிம்ம ராசி அன்பர்களே! உங்கள் முயற்சிகள் புத்துணர்ச்சி பெறும். நீங்கள் கண்டு வந்த தடைகள் விலகும். உங்கள் வாழ்க்கை தரம் நல்ல நிலைக்கு செல்லும். உறவுக்காரர்கள் மூலம் சில நல்வாய்புகள் கிடைக்கும்.
கன்னி: ராகு கேது பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கைகூடி வரும். மேலும் நல்ல சில முதலீடுகள் செய்வீர்கள். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப சுற்றுலா செல்ல வாய்ப்புகள் அமையும்.
துலாம்: துலாம் ராசி அன்பர்களே! நீங்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பது உங்கள் மன நிம்மதியை காக்கும். தொழில் லாபகரமாக இருக்கும். ஆனால் செலவுகளும் வரும். சேமிக்க பழகுங்கள்.
விருச்சிகம்: இந்த ராகு கேது பெயர்ச்சியால், நீங்கள் அனுபவித்து வந்த தோசங்கள் விலகும். ஊராரின் நன் மதிப்பினை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். உடன் பிறந்தோர் உதவிகரமாக இருப்பார்கள்.
தனுசு : தனுசு ராசி அன்பர்களே! உங்கள் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் , சங்கடங்கள் மெல்ல விலக துவங்கும். உறவினர்கள் சற்று விலகி நிற்பார்கள். அவ்வப்போது உடல் நலம் குன்றி காணப்பட்டாலும் திடமாக இருப்பீர்கள். பொறுமையாக இருக்க வேண்டிய நேரமிது.
மகரம் : மகர ராசிக்காரர்களுக்கு கல்வியில் ஆதிக்கம் செலுத்தும் நேரம் இது. உங்கள் ஆசிரியர்கள் துணை நிற்பர். பொருளாதார பிரச்சினைகள் விலகி நிம்மதி அடைவீர்கள். புதிய சொத்து வாங்க வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நிகழும்.
கும்பம்: ராகு கேது பெயர்ச்சி, கும்ப ராசி அன்பர்களுக்கு எதிர்பாராத வரவுகள் தரும். முடிவு எடுப்பதில் கவனமாக செயல்படுங்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலர் சொந்த ஊரில் இருந்து இடம் மாறுவார்கள்.
மீனம் : ராகு பகவான் மீன ராசிக்கு பெயர்வதால் மீன ராசிக்காரர்கள் எந்த காரியத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் துணையால் சில பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
No comments:
Post a Comment