Join THAMIZHKADAL WhatsApp Groups
அக்டோபர் மாதத்தில் சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசியில் பயணம் செய்வார். இந்த மாதத்தில் திடீர் யோகங்களும் பண வருமானமும் ராஜயோகமும் சிலருக்கு கைகூடி வரப்போகிறது.
அக்டோபர் மாதத்தில் நவ கிரகங்களின் கூட்டணி, பார்வை சஞ்சாரத்தினால் மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்குமா? நல்ல வேலை தேடி வருமா? பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
கிரக நிலை: மேஷத்தில் குரு ராகு, சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசியில் சூரியன், புதன், செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் சனி என இந்த மாதம் ஆரம்பத்தில் கிரக நிலைகள் இருந்தாலும் செவ்வாய் பெயர்ச்சி இன்னும் சில நாட்களில் நிகழ உள்ளது. ராகு கேது பெயர்ச்சியும் நிகழப்போகிறது. சூரியன் 18ஆம் தேதி ஐப்பசி மாதம் துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த கிரக நிலைகள், கிரகங்களின் பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மிதுனம்: ராசி நாதன் புதன் நான்காம் வீட்டில் உச்சம் பெற்றிருக்கிறார். சூரியன் நான்காம் வீட்டில் மாத முற்பகுதியில் புதனோடு இணைந்து பயணம் செய்கிறார். பத்ர யோகம் ஒரு பக்கம் புதாத்திய யோகம் மற்றொரு பக்கம் என கிரகங்கள் செயல்படுகின்றன. உங்கள் புத்தி தெளிவாகும். வேகமும் விவேகமும் அதிகமாகும். உங்களின் சக்தி அதிகரிக்கும். எதையும் தெளிவாக செய்து முடிப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. அதிக வேகம் ஆபத்தாகி விடும் பொறுமையும் நிதானமும் தேவை.
சந்தோஷம் நிறைந்த மாதம்: புதன் உச்சமாக இருப்பதால் உங்களுக்கு இந்த மாதம் அற்புதங்கள் அரங்கேறும். ராசி நாதன் வலிமையடைந்து இருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது. வரப்போகும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எந்த ஒரு நல்ல வாய்ப்பையும் விட்டு விடாதீர்கள். நல்ல வேலைகள் தேடி வரும். வேலையில் புரமோசன் கிடைக்கும். சொத்து சுகம் கிடைக்கும். புது வீடு வாங்குவதற்கான அட்வான்ஸ் தரப்போகிறீர்கள். பதவிகள் தேடி வரப்போகிறது. பத்தாம் வீட்டில் ஒரு பாவி பதவி யோகத்தை தரப்போகிறார். உங்களின் பொருளாதார நிலை உயரப்போகிறது.
முன்னேற்றம்: தொழில் வியாபாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி வரப்போகிறது. எல்லா துறைகளிலும் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். பேச்சாளார்கள் எழுத்தாளர்களுக்கு அற்புதமான யோகம் வரும். பிள்ளைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் வரப்போகிறது. அலுவலகத்தில் உயரதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். அரசு தொடர்பான வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இது நல்ல மாதம். அற்புதமான மாற்றங்கள் தேடி வரும்.
மருத்துவ செலவுகள்: லாப ஸ்தானத்தில் குரு ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது செவ்வாய் இணைந்து பயணம் செய்வது பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் தேவைப்படும். சர்ப்ப கிரகங்களின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு புதிய மாற்றத்தை தரப்போகிறது. திருமண முயற்சிகள் சுப செய்திகளை கொண்டு வரும். எதையும் நன்றாக விசாரித்து முடிவெடுப்பது நல்லது.
கவனம் தேவை: திடீர் மருத்துவ செலவுகள் வரும் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாதீர்கள். யோசித்து நிதானமாக அடி எடுத்து வைப்பது நல்லது. மாணவர்கள் படிப்பு விசயத்தில் யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். பாக்ய ஸ்தானத்தில் சனிபகவான் உற்சாகத்தை தருவார். புது வேலை வாய்ப்பினை தரப்போகிறார். அக்டோபர் மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும் என்றாலும் வேலை விசயத்திலும் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்திலும் நிதானம் தேவைப்படும்.
No comments:
Post a Comment