Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 11, 2023

தேர்வு இல்லை; மருத்துவ துறையில் 2250 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) துணை செவிலியர் அல்லது கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மொத்தம் 2250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.10.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

AUXILIARY NURSE MIDWIFE / VILLAGE HEALTH NURSE

காலியிடங்களின் எண்ணிக்கை : 2250

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multi – Purpose Health Workers (Female) training Course / Auxiliary Nurse Midwifery Training Course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 42 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/VHN_Notification_2023.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top