Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 26, 2023

2250 கிராம சுகாதார செவிலியர் பணி...பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலை பணிகளில் காலியாக உள்ள 2250 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் .

காலியிடங்கள்: 2,250

கல்வி தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குநரால் வழங்கப்பட்ட 18 மாத கால பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (அல்லது) 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டாண்டுகளுக்கான துணை செவிலியர் (auxiliary nurse midwife) அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு செவிலியர்மற்றும் பேறுகால மருத்துவப்பணிக்கான கவுன்சிலில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

: 2,222 ஆசிரியர் காலியிடங்கள்: டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்

வயது வரம்பு: இந்த காலிப்பணியிடங்களுக்கான வயது வரம்பு, முற்பட்ட வகுப்பினருக்கு 42 வயது எனவும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் விலக்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விகிதம்: சம்பள நிலை - 8 (ரூ .19,500 - 62,000)

தேர்வு முறை: இந்த பதவிக்கு எவ்வித எழுத்துத் தேர்வும், நேர்காணல் தேர்வும் நடத்தப்பட மாட்டாது. நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும். அதன்படி, சான்றிதழ்/ டிப்ளமா படிப்புக்கு 50% மதிப்பெண்ணும், 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு 30% மதிப்பெண்ணும், 10ம் வகுப்புத் தேர்ச்சிக்கு 20% மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தேர்வு முறை நடைபெறும்.

மேலும், கொரோனா தொற்று மேலாண்மையில் குறைந்தபட்சம் 100 நாட்கள் சிகிச்சை பணிகளை நிறைவு செய்த கிராம சுகாதார செவிலியர் செவிலியருக்கு இந்த பணியமர்த்துதலில் சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 12 மாதங்கள் கொரோனா பணியை நிறைவு செய்தவர்களுக்கு 2 மதிப்பெண்ணும், 12 முதல் 18 மாதங்கள் நிறைவு செய்தவர்களுக்கு 3 மதிப்பெண்ணும், 18 முதல் 24 மாதங்கள் நிறைவு செய்தவர்களுக்கு 4 மதிப்பெண்ணும், 24 மாதங்களுக்கு மேலாக பணி நிறைவு செய்தவர்களுக்கு 5 மதிப்பெண்ணும் அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 ஆகும். பட்டியலினத்தவர்/ பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் ரூ. 300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

: ரூ. 30,000 வரை சம்பளம்... எந்த தேர்வும் இல்லை... பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாகவே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2250 கிராம சுகாதார செவிலியர் பணி ஆள்சேர்க்கை அறிவிக்கையை இங்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனைத்து அசல் கல்விச்சான்றுகள், முன்னுரிமைப் பதிவு தொடர்பான சான்று, சாதிச்சான்று, தமிழ்வழி பயின்றதற்கான சான்று, கொரோனா பணி நிறைவு செய்த சான்று, தடையின்மை சான்று, ஆகியவற்றுடன் எதிர்வரும் அக். 31ம் தேதிக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top