மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு(வ) - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - தொழில் ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.
பலன்கள்: எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணும் உங்களுக்கு இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் ராசிக்குள் இருப்பதால் சுபபலன் உண்டாகும். எந்த ஒரு வேலையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ராசிக்கு 7ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய 3 கிரகங்களும் சேர்க்கை பெற்று இருப்பது தைரியத்தை அதிகப்படுத்தும்.
தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான விஷயங்களை செய்வீர்கள்.
கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள். பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். விளையாட்டு மற்றும் போட்டிகள் சாதகமாக பலன் தரும். சகமாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும்
பரிகாரம்: நவக்கிரகங்களை எல்லா பிரச்சினைகளும் தீரும். காரிய வெற்றி உண்டாகும்.
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.
பலன்கள்: உலக அனுபவ ஞானம் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். சந்திரன் சஞ்சாரம் ராசிக்கு 12-ல் வருவதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும். உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண்வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு முயற்சிகள் பலன் தரும். அரசியல்துறையினருக்கு செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: மகாலட்சுமியை தீபம் ஏற்றி வழிபட்டு வர செல்வம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சூர், செவ்வாய், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது.
பலன்கள்: எந்த ஒரு காரியத்தையும் விடாமுயற்சியுடன் செய்யும் உங்களுக்கு இந்த வாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வீண் மனக்கவலை அகலும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். அரசியல்துறையினருக்கு வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
பரிகாரம்: பெருமாளை வணங்க கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்
No comments:
Post a Comment