தமிழகத்தில் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு அக்.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மருது சகோதரர்கள் 222வது நினைவுதினம் அக்.27 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.
அதனால் சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்புத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக். 27 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ளார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment