Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 21, 2023

தமிழக மாணவ, மாணவிகளுக்கு 2 லட்சம் கிடைக்கும்.. மத்திய அரசு தரும் உதவி..விண்ணப்பிப்பது எப்படி?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு தகுதி உடைய மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை பெற தகுதியானவர்கள்.

இந்த கல்வி உதவித்தொகைக்கு 2023-24-ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தையோ அல்லது தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி விண்ணப்பிக்கலாம். மேலும், https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து புதுப்பித்தல் வருகிற டிசம்பர் 15-ந்தேதிக்குள்ளும், புதிதாக உதவித்தொகை வேண்டிய விண்ணப்பங்களை ஜனவரி 15-ந்தேதிக்குள்ளும், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News