Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 23, 2023

நீட் தேர்வு எழுதியிருந்தாலே போதும்.. கால்நடை மருத்துவம் ராஜஸ்தானில் படிக்கலாம்!: சேர்க்கைக்கு அக்.30 கடைசி நாள்

ராஜஸ்தான், ஹாசன்பூரில் ஆர்.ஆர்.கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.

கால்நடை மருத்துவமனையுடன் அமைந்துள்ள இங்கு இக்கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இங்கு ஐந்தரை ஆண்டு பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் எனும் கால்நடை மருத்துவப் படிப்புக்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். இந்த படிப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதி இருந்தாலே போதும்; தேர்ச்சி தேவையில்லை.

கால்நடை மருத்துவம் படித்தால் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் கால்நடை மருத்துவர், விலங்கு ஆராய்ச்சி விஞ்ஞானி, கால்நடை வளர்ச்சி அலுவலர், விலங்கு பராமரிப்பு நிபுணர் ஆகிய மத்திய மாநில அரசு வேலைகளில் சேரலாம். மேலும் உள்நாடு, வெளிநாடு வேலைவாய்ப்புகளும் உள்ளன.இந்த கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியாக குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதிகள் உள்ளன. தென்னிந்திய உணவு வழங்கப்படுகிறது.

கல்லூரி கட்டணம் மற்றும் விடுதி உட்பட ஆண்டு கட்டணம் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இந்தக் கல்லூரியில் சேர வருகிற 30-ம் தேதி கடைசி நாளாகும்.

எனவே தமிழகத்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் தென்னிந்திய சேர்க்கை அலுவலகம் பெங்களூரு, தருமபுரி, ஈரோடு, சென்னை ஆகிய பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆர்.ஆர்.கால்நடை மருத்துவக் கல்லூரி சேர்க்கை மையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.rrvetcollege.org இணையதளத்தைக் காணலாம்.

No comments:

Post a Comment