Join THAMIZHKADAL WhatsApp Groups
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து 40 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் என 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
'கடந்த ஏழு நாட்களாக அறவழியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு எங்கள் கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம். ஆனால் பல வழிகளில் எங்கள் போராட்டத்தை நீர்த்து போக செய்யும் முயற்சிகள் தான் நடந்து வருகின்றன. இதுகுறித்து நடைபெற்ற ஐந்து கட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.
ரூ.10000 சம்பளத்தில் அரசு பணியில் அமர்த்த கேட்டோம். கழிவறையை சுத்தம் செய்ய சொன்னாலும் சரி கரும்பலகையை சுத்தம் செய்ய சொன்னாலும் சரி, அதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தோம். நிதி பற்றாக்குறை தான் உள்ளது என்றால் நீதியும் பற்றாக்குறையாக உள்ளதா?. அறவழியில் போராடிய எங்களை கைது செய்து அடாவடி செய்துள்ளனர்.
வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போகிறோம். இதற்கான அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நேரடியாக சந்தித்து எங்கள் பலத்தை காட்டுவோம். திமுகவால் பாதிக்கப்பட்ட திமுக காரர்கள் செவிலியர் சங்கங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலில் நிற்போம்.
ஆசிரியர்களை கைது செய்யும் அவல நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது. அவர்களின் ஓட்டு வங்கி ஆட்டம் கண்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் அரசியல் கற்ற ஆசிரியர்கள், அரசியல் பாடம் நடத்த தயாராக உள்ளோம். தூங்கி கொண்டு இருக்கும் போது இப்படி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மாநில நிர்வாகிகளுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம்.'
இவ்வாறு இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக வின் பெருவாரியான வாக்குகள் ஆசிரிய சமுதாய வோட்டுக்கள்தான். அவர்கள் தானாக தோற்று விடுவார்கள் . ஆனாலும் நாம் இன்னும் அவர்களை வீழ்த்த யோசிக்க வேண்டும். இப்போதைக்கு நாம் அன்னாமலையுடன் கை கோர்த்தால் இவர்கள் தானாக வீழ்ந்துவிடுவார்கள். ஏற்கனவே மக்கள் அதிருப்தி இருப்பதால் சரியாக திட்டமிட்டால் திமுக வீழ்வது தின்னம்.
ReplyDelete