Join THAMIZHKADAL WhatsApp Groups
பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான EMRS ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் செயல்படும் 400 ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் (EMRS) 4062 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பள்ளி முதல்வர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 303
கல்வித் தகுதி : Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி : 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 78800- 209200
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2266
கல்வித் தகுதி : Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 47600- 151100
கணக்காளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 361
கல்வித் தகுதி : Degree of Commerce படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 35400- 112400
இளநிலை செயலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 759
கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 19900- 63200
ஆய்வக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 373
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு அல்லது 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18000- 56900
தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://emrs.tribal.gov.in/show_content.php?lang=1&level=1&ls_id=332&lid=223 என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.10.2023
விண்ணப்பக் கட்டணம் : முதல்வர் – ரூ. 2000, ஆசிரியர் – ரூ. 1500. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் – ரூ. 1000
இந்த அறிவிப்பு தொடர்பான விவரங்கள் https://emrs.tribal.gov.in/site/Information-Bulletin.pdf என்ற EMRS இன் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைக்கும்.
No comments:
Post a Comment