Join THAMIZHKADAL WhatsApp Groups
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அக்டோபர் மாதத்துக்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் மாதத்துக்கான ரூ.1000 ஒருநாள் முன்னதாகவே வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கோடியே 6 லட்சத்து 48 ஆயிரத்து 406 மகளிருக்கான உரிமைத் தொகை ஒருநாள் முன்னதாகவே வரவு வைக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கு இல்லாத 87,785 பயனாளிகளுக்கு அஞ்சல் மூலமாக உரிமைத் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment