Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 25, 2023

வங்கி விடுமுறையிலும் ரூ.5 லட்சம் வரை மொபைல் மூலம் பணம் அனுப்பலாம்..

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒரு காலத்தில் பிறருக்கு பணம் அனுப்ப, பணம் எடுக்க, அக்கவுண்ட் திறக்க, அக்கவுண்ட் தொடர்பான விவரங்களை பெற என்று இருக்கக்கூடிய வங்கி தொடர்பான வேலைகள் அனைத்திற்கும் நாம் நீண்ட வரிசையில் காத்திருந்து, நமது வேலையை முடித்து வர வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருந்தோம்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எல்லாமே ஆன்லைன் என்று ஆன பிற்பாடு மொபைல் போன் இருந்தால் பெரும்பாலான வங்கி வேலைகளை வீட்டிலிருந்தே நாம் செய்து முடித்து விடலாம்.

அதுவும் பிறருக்கு பணம் அனுப்புவது தற்போது மிகவும் சுலபமான காரியமாக மாறிவிட்டது. டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நகர்ந்து வரும் நமது பயணத்தில் ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன்கள் தற்போது அதிக பிரபலமடைந்து வருகின்றன. ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு விரைவாக பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான வசதி இப்போது நம் கையில் இருக்கிறது. பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கு நமது நாட்டில் ஏராளமான சேனல்கள் உள்ளன. அவற்றில் ஐஎம்பிஎஸ் ஒன்று. இந்த ட்ரான்ஸ்ஃபர் சேனல் குறித்த அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐஎம்பிஎஸ் ( IMPS) என்றால் என்ன?

உடனடி பணம் அனுப்பும் சேவையான IMPS -ஐ நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payment Corporation of India - NPCI) இயக்கி வருகிறது. ஐஎம்பிஎஸ் என்பது இமீடியேட் பேமெண்ட் சர்வீஸ் (Immediate Payment Service) என்பதன் சுருக்கம்.

இந்த பேமெண்ட் சேனலை பயன்படுத்தி கஸ்டமர்கள் பிறருக்கு சேவிங்ஸ் அக்கவுண்டில் இருந்து பேமெண்ட் அனுப்பவோ அல்லது பெறவோ செய்யலாம். மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங்கை பயன்படுத்தி வங்கிகளுக்கு இடையேயான ட்ரான்ஸாக்ஷன்களை இந்த சேவை பூர்த்தி செய்கிறது.

எந்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் ?

ஒரு வருடத்தில் இருக்கக்கூடிய 365 நாட்களிலுமே தினமும் 24 மணி நேரமும் இந்த சேவையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வங்கி விடுமுறை அன்று இந்த சேவையை பயன்படுத்த முடியுமா?

பொது விடுமுறைகள் மற்றும் வங்கிகளுக்கென்று தனியாக அறிவிக்கப்படும் விடுமுறைகள் என்று எந்தவிதமான விடுமுறை நாட்களிலும் கூட ஐஎம்பிஎஸ் சேவை எப்பொழுதும் திறந்தே இருக்கும். வங்கி விடுமுறை நாட்களில் இந்த சேவையை பயன்படுத்தி நீங்கள் செய்யக்கூடிய ட்ரான்ஷாக்ஷன் உரிய நபருக்கு கொண்டு சேர்ப்பதை இந்த சேவை உறுதி செய்கிறது.

பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்வதற்கான கட்டணங்கள் :

IMPS கட்டணங்கள் என்பது இந்த சேவையை பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு தொகை அனுப்பி இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து அமையும். இந்த கட்டணத் தொகை 2.5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை மாறுபடலாம். 10,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பப்படும் பணத்திற்கு மட்டுமே இந்த கட்டணங்கள் பொருந்தும்.

யாரெல்லாம் இந்த சேவையை பயன்படுத்தலாம்?

இந்த சேவையை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் உங்களிடம் மொபைல் பேங்கிங் ஆப்ஷன் கொண்ட சேவிங்ஸ் அக்கவுண்ட் இருக்க வேண்டும்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top