Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 4, 2023

பணிக்கு செல்லாத இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் - பள்ளி கல்வித்துறை


சென்னை நுங்கம்பாக்கத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 9 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

3000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணித்துவிட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை பதிவு ஆசிரியர்களின் விவரங்கள் பள்ளி வாரியாக சேகரிக்கப்பட்டுள்ளது என்றும், சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி!

மாநிலம் முழுவதும் இன்று எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிலையில் பயிற்சியில் பங்கேற்காத இடைநிலை ஆசிரியர்கள், பயிற்சி அளிக்க பணிக்கு வராத இடங்களை வைத்து ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இடைநிலை பதிவு ஆசிரியர்களிடம் கேட்டபோது,

“அது மட்டும் தான் அவர்களால் செய்ய முடியும் சம்பளம் பிடிப்பதனால், எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் கிடையாது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என இடைநிலை பதிவு முன்பு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment