Join THAMIZHKADAL WhatsApp Groups
தேனி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் நகராட்சி சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சியில் 33 வார்டுகளிலும் சுகாதார ஆய்வாளர்கள், பாரா மெடிக்கல் பயிலும் மாணவர்கள் டெங்கு கொசு உற்பத்தி ஆகியுள்ளதா என கண்டறிகின்றனர்.
நகரில் தண்ணீர் தேங்காமல் அகற்றி வருகிறோம். நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளோம், என்றனர்.
No comments:
Post a Comment