Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 30, 2023

உடலுக்கு ஆரோக்கியம் வேண்டுமெனில் தண்ணீர் இப்படித்தான் குடிக்க வேண்டும்.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நீங்கள் சரியான முறையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அதற்கு சில விதிகளை ஆயுர்வேதம் விதிக்கிறது.

நீங்கள் சரியான நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகிறது. அது ஆயுர்வேத மருத்துவத்திற்கு மிகவும் முக்கியம். எனவே சரியான முறையில் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது என்று ஆயுர்வேதம் வரையறுக்கிறது. ஆரோக்கியமான முறையில் தண்ணீர் குடிக்கும் வழிகளாக ஆயுர்வேதம் கூறுவது என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

காலையில் சூடான தண்ணீர் பருகுங்கள்

ஒரு டம்ளர் நிறைய சூடான தண்ணீரை குடித்து உங்கள் நாளை துவங்குங்கள். இது உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. உங்கள் உடலை தூக்கத்திற்குப்பின் போதிய நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதில் எலுமிச்சை பிழிந்தும் குடிக்கலாம். நீங்கள் அசிடிட்டி போன்ற பிரச்னைகளால் அவதியுறுகிறீர்கள் என்றால் அதை தவிர்க்கலாம்.

அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீர்தான் பருகவேண்டும்

ஆயுர்வேதம் பொதுவாக அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீர் மட்டுமே பருகவேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஃபிரிட்ஜில் வைத்து குடித்து ஜில் தண்ணீர் ஜீரண கோளாறை ஏற்படுத்துகிறது. அஜீரணத்தை உண்டாக்குகிறது. மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பது உங்களுக்கு சௌகர்யத்தை உண்டாக்குகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக பருகவேண்டும்.

ஒரேடியாக மடமடவென்று தண்ணீர் குடிக்காமல், கொஞ்சம், கொஞ்சமாக நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் பருகுவது உடல் தண்ணீரை உறிஞ்சுவதற்கும், நீரேற்றத்துடன் இருப்பதற்கும் உதவுகிறது. உங்கள் சிறுநீரகத்தில் அதிக சுவை சேர்வதையும் இது தவிர்க்கிறது.

தாகமாக இருக்கும்போது தண்ணீரை தவிர்க்காதீர்கள்

ஆயுர்வேதம், உங்கள் உடலை கவனிக்க அறிவுறுத்துகிறது. அதன்படி, நீங்கள் தாகம் எடுக்கும்போது தண்ணீர் கட்டாயம் குடித்துவிடவேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதிக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். தண்ணீரால் உடலை வருத்துவது தவறு. அது ஜீரணத்தை தடுக்கிறது. ஜீரணத்தை ஊக்குவிக்கும் ஹார்மோன்களை நீர்த்துப்போகச் செய்கிறது.

ஐஸ் வாட்டரை கட்டாயம் தவிர்க்க வேண்டும்

ஐஸ் வாட்டர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக உணவு உண்ணும்போது ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது ஜீரணத்தை தடுக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. சூடான தண்ணீர் அல்லது அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீர்தான சிறந்தது.

உடனடியாக குடிக்காதீர்கள்

சாப்பிடும்போது வேகவேகமாக தண்ணீர் பருகாதீர்கள். எப்போது பொருமையாக தண்ணீர் பருக வேண்டும். ஒவ்வொரு மடக்கு தண்ணீரையும் உணர்ந்து பருகுங்கள்.

தண்ணீரில் மூலிகைகள் சேர்த்து பருகுவது நல்லது

தண்ணீரில் ஏதேனும் மூலிகைகள் சேர்த்து பருகுவதை வழக்கமாகக்கொள்ளுங்கள். குறிப்பாக துளசி, இஞ்சி, வெந்தயம், சீரகம் என எதாவது ஒன்றை இளஞ்சூடான தண்ணீரில் சேர்த்துவிடுங்கள். அவற்றின் நற்குணங்கள் அந்த நீரில் இறங்கியிருக்கும். அந்த தண்ணீரை பருகும்போது உங்கள் உடலுக்கு அவை நன்மையை அளிக்கின்றன.

இயற்கை எலெக்ட்ரோலைட்கள்

இளநீர் அல்லது தேங்காய் தண்ணீர் இயற்கையிலே எலெக்ட்ரோலைட்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. அதில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. எனவே அவ்வப்போது இளநீரை எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது.

சாப்பிடும்போது தண்ணீர் பருகுவதை தவிருங்கள்

கட்டாயம் சாப்பிடும்போது தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். அது ஜீரணத்தை தடுக்கிறது. மாறாக உணவுக்கு இடையில் தண்ணீர் பருகுவது ஜீரணத்துக்கு உதவுகிறது.

தண்ணீர் பருவது குறித்து கவனமுடன் இருங்கள்

தண்ணீர் பருகுவது குறித்து கவனமுடன் இருக்க வேண்டும். உங்கள் உடலுக்கு தண்ணீர் சத்து மிகவும் அவசியம். எனவே அதை பருகும்போது மிகவும் கவனமுடன் இருப்பது அவசியம். உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தை நீங்கள் பருகும் தண்ணீர்தான் வழங்குகிறது எனவே தண்ணீர் பருகும்போது அதிக கவனமுடன் இருங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News