Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாகவே அனைவருக்கும் தேங்காய் பிடித்தமான உணவாகத்தான் இருக்கும். சிறுபராயத்தில் சமையல் அறைக்கு சென்றவுடன் அம்மா சமைக்க வைத்திருக்கும் தேங்காயை எடுத்து ஒரு கடி கடித்து திட்டு வாங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
சிறு வயதில் தேங்காயின் சுவைக்காக மட்டுமே தேங்காயை சாப்பிட்டிருப்போம். ஆனால் தேங்காயில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கு அளப்பரிய வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி எண்ணிலடங்கா மருத்துவ குணங்களையும் கெண்டிருக்கின்றது.
தினசரி வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் என்னனென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் சாப்பிடுவது வயிறு, முடி மற்றும் தோல், இதயம், எல்லாவற்றுக்கும் நல்லது. தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன.
வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது செரிமான அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கொடுத்து மலச்சிக்கலையும் தடுக்கின்றது.
வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பருவம் மாறும் போது தேங்காய் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேங்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதில் நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் நல்ல கொழுப்புகள் உள்ளன.
தேங்காய் கூந்தல் வளர்ச்சிக்கும் மினுமினுப்பான கூந்தலுக்கும் மிகவும் துணைப்புரிகின்றது. தேங்காய் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தினசரி வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டு வந்தால் சருமம் என்றும் இளமையாக இருக்கும். சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களில் தேங்காய் பிரதான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதற்கும் இது தான் காரணம்.
இது முடியின் பொலிவை இரட்டிப்பாக்குகிறது. மேலும், பச்சை தேங்காய் அல்லது அதன் நீர் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. இதில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.
வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது. தேங்காயின் மருத்துவகுணம் இதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை சீராக்கும் தன்மை கொண்டது.
No comments:
Post a Comment