Join THAMIZHKADAL WhatsApp Groups
தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
மறைந்த வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழக அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அவர் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.தஞ்சாவூர் ஈச்சாங்கோட்டையில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படுகிறது. இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி என அழைக்கப்படும். வேளாண்மை பல்கலையில் மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்கப்படும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்
No comments:
Post a Comment