Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர்: கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
காப்பு
- உதயமார்த்தாண்ட விநாயகர்
- (ஆசிரியர் பிறந்த ஊர் தேரூர். இது, சுசீந்திரத்துக்கு அருகில் உள்ளது.
- அங்குள்ள விநாயகர் திருநாமம் ‘உதயமார்த்தாண்ட விநாயகர்’ என்பதாகும்.
- தேரூர்,`இரதபுரி` என்றும் அழைக்கப்பெறும்.)
- (வெண்பா)
- சீருதவும் நல்லூராந் தேரூர் அழகிதிருப்
- பேருதவும் பாவினையான் பேசவே - ஓருதய
- மார்த்தாண்ட வேழம் வழுவேதும் வாராமல்
- காத்தாண்டு கொள்ளக் கடன்.
(பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
- (நூல்)
1. பூவாகி அப்பூப் பொருந்துவண மாகிஅப்
- பூவிலுறு மணமு மாகிப்
- பூதமாய்ப் புலனாய்ப் புறப்பாழு மாய்அப்
- புணர்ப்பைஅறி விக்கும் அறிவாய்
- ஓவாத அறிவினுக் குறுமிலக் காகிநின்று
- உண்மையை உணர்த்து கின்ற
- ஒண்சுடர்க் கற்பூர தீபமாய் வல்லிருள்
- ஒழித்தில குநெறி விளக்கும்
- மாவேத மாய்ஆக மப்பொருளு மாகியே
- மலியுமுன் னருளை யென்றும்
- வாயார வாழ்த்தித் துதிப்பதினும், மேலான
- வாழ்வேதும் எங்கு முண்டோ?
- தேவாதி தேவர்தொழு மூவா மருந்தே!
- சிவானந்த போக விளைவே!
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவி அழகம்மை உமையே!
2. பத்திக்கும் என்மடப் புத்திக்கும் ஓயாத
- பகையலால் பட்ச மில்லை;
- பஞ்சமா பாதகமும் எஞ்சா தெனக்குற்ற
- பள்ளியிற் பாடம், அம்மா!
- துத்திக்கும் உன்பதம் சுற்றிப் பணிந்துசிறு
- தொண்டுகள் செய்து மறியேன்;
- தோத்திரப் பாமாலை சாத்தி யறியேன்,இவை
- சொல்லுதற் கொன்றி ரண்டோ?
- மத்திக்கும் வெண்தயிரை யொத்துக் கலங்குமென்
- மறுக்கம்நீ காண விலையோ?
- மைந்தனேன் செய்கின்ற குற்றங்கள் ஏதுமொரு
- வகையா யெடுக்க லாமோ?
- தித்திக்கும் முக்கனிகள் எத்திக்கும் உதிர்கின்ற
- செறிமரச் சோலை சூழும்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவியழ கம்மை உமையே!
3. ஆற்றுப் பெருக்கையொத் தழிகின்ற செல்வத்தை
- அடைவதில் விருப்பு மில்லேன்
- ஆண்டியாய் வேண்டிப் புசித்துண்டு நாடோறும்
- அலைவதில் வெறுப்பு மில்லேன்;
- காற்றுப் பெயர்ந்திடிற் காயமோ சூத்திரக்
- கயிறற்ற பாவை, அதனால்
- காரியம் சிறிதேனு முளதோ? உன்இருபதக்
- கஞ்சமே தஞ்ச மென்று
- போற்றிப் பெறும்பேறு பெறுதற்கென் உள்ள(ம்)எப்
- போதுந் தவிக்கு(து) அம்மா!
- பொங்கிடுங் குரவையிட் தெங்குமோ ரொலிசெய்து
- பொலிவாக மள்ள ரெல்லாம்
- சேற்றுப் பெருக்கூடு நாற்றைப் புதைக்கின்ற
- செய்யகஞ் சூழும் ஊராம்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவியழ கம்மை உமையே!
4. பொன்னையே பெண்ணையே மண்ணையே எண்ணிஎன்
- பொழுதெலாம் போக்கி விட்டேன்,
- புண்ணியச் செயலெதும் பண்ணியான் அறிகிலேன்,
- பொல்லாங்கு புரியும் நெறியேன்.
- முன்னையோர் சொன்னமொழி உன்னாத முழுமூடன்
- மூர்க்கரோ டுறவு கொண்டேன்
- மூவுலகும் என்னையொப் பாரில்லை, இல்லைஇது
- முக்காலும் உண்மை, உண்மை
- அன்னையே நின்னையே அல்லாது பின்னையோர்
- ஆதாரம் வேறும் உண்டோ?
- அறிவற்ற சிறியேனை, அன்பற்ற கொடியேனை,
- அடிமையாய் ஆண்டு கொள்வாய்;
- தென்னையே புன்னையே மன்னிவளர் சோலைஎத்
- திக்கினுஞ் சூழும் ஊராம்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவியழ கம்மை உமையே!
5. தையலார் மீதிலே மையலாய் ஓயாது
- சண்டாள நெறியி லெல்லாம்
- சாடிக்குதித்தோடி அலைகின்ற மனதையான்
- சற்றேனும் உன்னை நோக்கிப்
- பொய்யிலா மெய்யன்பு பூண்டே துதித்திடப்
- போதனைகள் செய்வ தெல்லாம்
- பொறியெழும் பாலைவிழு துளியாவ தன்றிஒரு
- புண்ணியம் பெறுதல் காணேன்;
- மையிலா நெறிகாட்டி, அடியரிற் கூட்டி,உன்
- மலர்ப்பதஞ் சென்னி சூட்டி
- வற்றாத கருணையாந் தெள்ளமுதம் ஊட்டி,எனை
- வாழ்விப்ப தெந்த நாளோ?
- மெய்யெலாம் துய்யவெண் சங்கினம் இராப்பொழுது
- திங்களின் ஒளியை வீசும்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவி அழகம்மை உமையே!
6. முக்கோண முதலான கோணங்க ளிட்டுனது
- மூலாட் சரத்தை யிட்டு
- மும்மலம் அறுக்குமுன் செம்மலர்த் தாளையே
- முறையுடன் பூசை புரிவோர்,
- மிக்கோ ரென,சித்தி எட்டையும் பெற்றபின்
- மேலான வீடும் அடைவார்;
- மேதினியில் இவ்வுண்மை அறியாத மாந்தரே
- வேறுதெய் வங்கள் பணிவார்;
- பொக்கான எள்ளினை மிக்கவே ஆட்டினும்
- பூசுதற் கெண்ணெய் தருமோ?
- பொய்யான தெய்வங்கள் ஒருகோடி
- புண்ணியம் சிறிதும் உண்டேல் போற்றினும்
- திக்கா றிரண்டோடு மிக்காறு பாய்கின்ற
- செய்யகஞ் சூழும் ஊராம்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவியழ கம்மை உமையே!
7. சந்ததிக் கேயென்ன என்னைப் பயந்திட்ட
- தந்தைதாய் செய்த தவமோ?
- தலைநாளில் யான்செய்த புண்ணியமோ? அல்லதுன்
- தண்ணருட் பெற்றி தானோ?
- சிந்தையுன் பெயரினொடு நாவுனது சீரையும்
- திறமென்று கொண்டு, நித்தம்
- சீமாட்டி யென்றுனது கால்மாட் டிலேவந்து
- சென்னியும் பணிய நின்றேன்;
- எந்தநாள் உள்ளமும் இரங்கிநீ ஆள்வையோ?
- எவ்விதத் துய்கு வேனோ?
- இவ்வுடலை இன்னமும் எடுத்தெடுத் துழல்வனோ?
- யாதொன்றும் அறிகி லேனே!
- செந்தமிழ் மணத்தினொடு செல்வர்மன முங்கொடைச்
- செங்கைதரு மணமும் மாறாத்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவியழ கம்மை உமையே!
8. ஆங்காரி ஆனந்தி அம்பிகை நிரந்தரி
- அந்தரி ஆளி யூர்தி
- ஆரணி சர்வபரி பூரணி நாரணி
- அயிராணி புயக வேணி
- பாங்கான பார்வதி பார்க்கவி புராதனி
- பகவதி வீரி நாரி
- பயிரவி மகிடசம் மாரியென் றுனதுபேர்
- பல்லா யிரங்கள் சொல்லி,
- ஓங்கா தரத்தொடு பணிகின்ற அடியாரின்
- அபயபதம் என்ற னக்கிவ்
- உலகாளும் இறைவன் கவிக்குமொரு முடியினும்
- உயர்ந்ததிரு முடிகள், அம்மா!
சொற்பொருள்தேங்காமரம்- தேம்+கா+மரம்; |
- தேங்கா மரத்திலே மாங்கா பறிக்கவொரு
- சினைமந்தி கொக்கை நோக்கும்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவியழ கம்மை உமையே!
9. வாணிக்கும் நளினிக்கும் அரியதாய் என்றுன்னை
- வாயார வாழ்த்தி நின்றேன்;
- மந்தாரம் முல்லைஇரு வாட்சிநீ யென்றுதலை
- மாலையின் அணிந்து கொண்டேன்;
- கோணுக்குள் வளர்கின்ற குயிலென் றுனைத்தினம்
- கோணாது பேணு கின்றேன்;
- குளிரான திங்களொடு கொண்டலென் றென்பவக்
- கோடையுந் தீர வந்தேன்;
- மாணிக்கம் வயிரமர கதமும்நீ யென்றென்
- மனப்பே டகத்து வைத்தேன்;
- வையகத் தெளியேனை ஆட்கொள்ள வந்தகுல
- மாதெய் வம்,நீ யல்லவோ?
- சேணுக்கு நாட்டுபல தூணுக்கு நிகரெனத்
- தெங்கினஞ் சூழும் ஊராம்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவியழ கம்மை உமையே!
10. கொண்டலைக் கண்டனைய கூந்தலும், குவியாத
- கோகனகம் ஒத்த முகமும்
- குண்டலம் திகழ்கின்ற காதும்,ஒப் பின்றிஅருள்
- குடிகொண்ட நீண்ட விழியும்
- தொண்டையங் கனிவாயும், வெண்மூ ரலும்,ஞான
- சுதைதங்கு கும்ப தனமும்,
- துடியொத்த இடையு(ம்),ஒரு பிடியொத்த நடையும்
- சூலஞ் சுமந்த கரமும்,
- பண்டைநாள் சிவனோடு வாதாடி நடமிட்ட
- பாதார விந்த மலரும்,
- பாலனேன் கண்டுகளி கூரவே, திருவுளம்
- பாலிக்க வேண்டும், அம்மா!
- தெண்டிரை உடுத்துபூ மண்டலத் தேவந்த
- தேவபுரி யொத்த புரியாம்
- தென்னிரத புரிவாழும் என்னரிய செல்வமே!
- தேவியழ கம்மை உமையே!
No comments:
Post a Comment