Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 10, 2023

செல்போனை சட்டை பாக்கெட்டில் வைக்கலாமா? பலருக்கும் தெரியாத தகவல் இதோ!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உலகம் முழுவதும், குழந்தைகள் உட்பட ஃபோன்களை பயன்படுத்துகிறார்கள்.
மூன்றில் இரண்டு நபர்கள், ஸ்மார்ட்போனுக்கு அடிமை என்றே கூறலாம். 70% ஸ்மார்ட்போன் யுசர்கள் உறங்கப் போவதற்கு முன்பு, கடைசியாக ஸ்மார்ட்போனை பார்த்துவிட்டு தூங்கச் செல்கிறார்களாம். 3 முதல் 5 சதவிகிதத்தினர் தலையணைக்கு அருகிலேயே ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டே தூங்குகிறார்களாம். போன் இல்லாமல் தனியே இருப்பது நினைத்தாலே பயமாக இருக்கிறது என்று 66% கருதுகிறார்கள்.

இவ்வாறு நம்முடைய வாழ்வின் மிகப்பெரிய அங்கமாக மாறிவிட்ட ஸ்மார்ட் போனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் ஆபத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஸ்மார்ட்போனை நாம் எந்த இடத்தில் வைத்துக் கொள்கிறோம் என்பது அதைவிட அதிக ஆபத்தை கொண்டுள்ளது. பெண்களைப் பொறுத்தவரை, பலரும் ஸ்மார்ட்போனை பவுச்சிலோ அல்லது ஹேண்ட்பேகிலோ வைத்துக் கொள்வார்கள். ஆனால் ஆண்கள் பாக்கெட்டில்தான் ஸ்மார்ட்போனை வைப்பார்கள். நாள் முழுவதும் நம்முடன் உடலோடு இணையாத ஒரு உறுப்பாக ஸ்மார்ட் போன் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் பாக்கெட்டில் ஸ்மார்ட் போனை வைத்துக்கொள்ளலாமா கூடாதா என்பது பற்றி நீண்ட காலமாக விவாதம் நடந்து வருகிறது.

மொபைல் போன்கள் நம்மை எப்படி எல்லாம் பாதிக்கும்?

அதிகப்படியான மொபைல் போன் பயன்பாடு உடல் மற்றும் மனநல பிரச்சினைகளுடன் தொடர்புடையது என்று பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதைப்பற்றி அறிக்கைகளும் வெளியாகி இருக்கின்றன. கட்டுப்படுத்த முடியாத, அடிக்க்ஷன் போன்ற மொபைல் போன் பயன்பாடு டிப்ரெஷன், தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளாத நிலை மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது. குறிப்பாக, இளம் வயதினர் நீண்ட நேரம் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கையில் உடல் ரீதியாக மொபைல் போனிலிருந்து வெளியாகும் ரேடியேஷன் உடலை பல விதங்களில் பாதிக்கிறது. எந்த அளவுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு ரேடியேஷன், அதாவது கதிர்வீச்சு நம்மை பாதிக்கும். இந்த ரேடியேஷனை உடல் உறிஞ்சிக் கொள்கிறது.

மொபைல் ஃபோனில் இருந்து வெளியாகும் நான்-ஐயனைசிங் ரேடியேஷன்

நான்-ஐயனைசிங் ரேடியேஷன், திரைப்படங்களில் வருவது போல, உடலை நேரடியாக உடனடியாக பாதிக்காது. இதைப் பற்றி ஆய்வு பல காலமாக மேற்கொள்ளப்படாமல் வந்தது. இதனாலேயே, ரேடியோ ஆக்டிவ் மெட்டீரியல்கள் பற்பசை முதல் பொம்மைகள் வரை, பயன்படுத்தப்பட்டன. ஆனால், மொபைல் போனில் இத்தகைய ரேடியேஷன் வெளிவராது. இவை ரேடியோ ஃபிரீக்வன்சி அளவில் தான் ரேடியேஷனை வெளிப்படுத்தும். ஆனால், தற்போது இந்த RF கூட, மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கனடாவில் உள்ள டிரெண்ட் பல்கலைகழகத்தில், இது பற்றிய ஆய்வில் வெளியிடப்பட்ட தகவல்கள் இங்கே.

செல்லுலார் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதற்கான போதிய அளவுக்கு அறிவியல் ஆதாரம் உள்ளன

ஃப்ரீ ரேடிகல்சால் கேன்சர் ஏற்படும், இந்த மொபைல் போன்களில் இருந்து வெளியாகும் நான்-ஐயனைசிங் ரேடியேஷன், ஃப்ரீ ரேடிக்கல்சை அதிகரிக்கும்.

இதையொட்டி பல அறிவியல் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு, மொபைல் போனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்று வலியுறுத்தி வருகிறது. எனவே, மொபைல் போன்களை பாக்கெட்டில் வைத்தால் என்ன ஆகும் என்பது பற்றியும் கூறியுள்ளது.

சமீபத்தில் மொபைல் போன் உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்கள் அதிகமாக மொபைல் போன்களை பயன்படுத்துவது குறித்து எச்சரித்துள்ளார்கள். ஆப்பிள் நிறுவனம் கூட, ஆப்பிள் சாதனங்களை, உடலிலிருந்து குறைந்த பட்சம் 10 மில்லிமீட்டர் தூரமாவது விலகி வைத்தால் தான் கதிர்வீச்சு ஏற்படாமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளது.

மொபைல் போன்கள் பயன்படுத்தினால் மூளை கேன்சர் வராது. ஆனால், ஸ்மார்ட் போன்கள் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை 60% வரை அதிகரிக்கும். எனவே, புற்றுநோயை பேன்ட் பேக்கெட்டில் அல்லது சட்டை பேக்கெட்டில் போட்டுக்கொள்ள வேண்டாமே..

சாதரணமாக மொபைல் போன்களால், பின்வரும் ஆபத்துகள் ஏற்படும்.

மூளை மற்றும் உள்-காதுகள் கேன்சரை, மற்றும் சில வகையான தொண்டை மற்றும் தைராய்டு புற்றுநோய்களை அதிகப்படுத்தும்.

மார்பக புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும்

சில வகையான டெஸ்டிகுளார் கேன்சர் பாதிப்பு ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும்

ஆண்களுக்கு இனப்பெருக்கம் பாதிக்கப்படும்

DNA பாதிக்கப்படும் என்பதால், சில ஆட்டோ-இம்யூன் நோய்கள் ஏற்படலாம்

இதய நோய்களும், சில அரிதான இதய புற்றுநோய்களும் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

மன நலம் சார்ந்த நோய்கள் உண்டாகலாம்

உடலுக்கு மிக அருகில் எப்போதுமே போனை வைத்திருந்தால், அதில் இருந்து வெளியாகும் ரேடியேஷன் உடலால் உறிஞ்சப்படும். உடலுக்குள் ஊடுருவும் போது, மேற்கூறிய நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படலாம். எனவே, எப்போதுமே ஸ்மார்ட்ஃபோனை குறைந்தது 10மிமி தொலைவில் வைத்த்திருங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News