Join THAMIZHKADAL WhatsApp Groups
இயற்கையின் அற்புதங்களில் சூரிய சக்திக்கு இடமுண்டு. அத்தகைய சூரிய சக்தி உடலுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புக்களை சரி செய்ய உதவுகிறது.
சூரிய குளியலுக்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். காலை 9 மணிக்குள் அல்லது மாலை 5 மணிக்குப் பின், சூரிய ஒளி விழும் இடத்தில் குறைந்தபட்சம் 5 நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை நின்று எடுத்து கொள்ளலாம். சரும நோய் அல்லது ஒவ்வாமை உடையவர்கள் தேங்காய் எண்ணெய் அல்லது சன்ஸ்கீரின் கிரீம் பயன்படுத்தலாம். சூரிய ஒளி உடலில் உள்ள கழிவுகளை வியர்வை வாயிலாக வெளியேற்றும் என்பதால், உடல் எடையும் குறையும்.
சூரிய குளியல் போடுவதால் நமக்கு கிடைக்கும் 6 முக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம். 1.எலும்புகளை வலுவாக்கும் : சூரிய ஒளியில் உடலுக்கு தேவையான வைட்டமின் - டி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. எலும்புகள் ஆரோக்கியத்திற்கு, கருவுறுதலுக்கு உடலில் போதுமான அளவு வைட்டமின் - டி இருப்பது அவசியம். மேலும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், வீக்கத்தை குறைப்பதில் வைட்டமின் - டி முக்கிய பங்கு வகிக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.2. நீரிழிவை கட்டுப்படுத்தும் : சமீபத்திய ஆய்வு முடிவுகளில், போதுமான அளவு சூரிய ஒளியில் நிற்பது, டைப் 2 நீரிழிவு பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கவும், தடிப்பு தோல் அழற்சியை குறைக்க உதவுகிறது. மேலும் வீட்டில் இருப்பவர்களை விட, அதிக நேரம் வெளியே சூரிய ஒளியில் இருப்பவர்களுக்கு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 3. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் : சூரிய ஒளிக்கும், ரத்த அழுத்தத்திற்கு இடையேயான தொடர்புகள் குறித்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
வழக்கமான, அதிக ரத்த அழுத்தம், இதய தொடர்பான பிரச்னைகளுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. சூரிய குளியல் எடுத்து கொள்வோருக்கு, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. உடலில் சூரிய ஒளி படும் போது, தோலில் அதிக நைட்ரஜன் ஆக்சைடை உற்பத்தி செய்கிறது.இது தமனிகளை ஓய்வாக உணரவைப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். 4. புற்றுநோயை தடுக்கும் : அதிகப்படியான புற ஊதாக்கதிர்கள், உடலில் படும் போது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயமுள்ளது.
இருப்பினும், சில சமீபத்திய ஆய்வுகளில், சூரிய குளியல் எடுத்து கொள்வதால், பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மற்றும் கணைய புற்றுநோய், கருப்பை புற்றுநோயை தடுக்குமென கூறப்பட்டுள்ளது.5. மகிழ்ச்சியை அதிகரிக்கும் : தூக்கம் தொடர்பான பிரச்னையில் இருந்து விடுபடுவதோடு, சூரிய குளியல், உடலில் மகிழ்ச்சி ஹார்மோன் என்றழைக்கப்படும் செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். இது உங்களை மகிழ்ச்சியாகவும், நேர்மறையாக சிந்திக்க தூண்டும்.6. தூக்கமின்மையை துரத்தும் : சமீபத்திய ஆய்வு முடிவுகளில், சூரிய ஒளியில் சில நிமிடங்கள் செலவிடுவது, நமது உடலில் சர்க்காடியன் ரிதத்தை ஒழுங்குப்படுத்தும். இது மெலடோனின் என்னும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தூக்க முறையை மேம்படுத்துகிறது.
No comments:
Post a Comment