Join THAMIZHKADAL WhatsApp Groups
முக்கிய நிகழ்வுகளில் வாழைமரம் கட்டுவதன் பின்னால் உள்ள அறிவியல் காரணம் பலரையும் வியக்க வைக்கிறது. அதாவது வாழை இலையும் வாழைத்தண்டு சாறும் வாழைக்கிழங்கின் சாரும் நல்ல ஒரு நச்சு முறிப்பான்களாக உள்ளது.
இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச் சாறு குடிப்பதற்கு கொடுப்பார்கள். இது ஒரு சிறந்த நச்சு முறிப்பானாக இருப்பதால் வாழை இலையின் மேல் காணப்படும் பச்சை தன்மை குளோரோஃபில் என்ற வேதிப்பொருளால் ஆனது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அதனால் வாழை இலையில் சாப்பிடுவதால் நோய்கள் இல்லாமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம். வாழை மரத்தில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் மிக சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. தாவரங்கள் காற்றில் இருக்கக்கூடிய கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகின்றன. விழாக்களின் போது ஏராளமான விருந்தினர்கள் வந்து சேர்ப்பார்கள் என்பதால் அவர்கள் ஒவ்வொருவரின் வெளி சுவாசத்தின் மூலம் பெறப்படும் கார்பன் டை ஆக்சைடை காற்றில் கலக்கும்போது அதனை சமநிலைப்படுத்துவதற்கு வாழை மரங்கள் கட்டப்படுகின்றது.
அதே சமயம் கூட்டம் அதிகம் சேரும்போது அவர்களின் உடல் உஷ்ணம் மற்றும் வேர்வை ஒன்றாக சேரும்போது ஒரு விதமான மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு தீர்வாக வாழை மரங்கள் கட்டப்படுகின்றன. பொதுவாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய்த்தொற்று அதிகரிப்பதற்கான அபாயம் அதிகமாக இருப்பதால் விழாக்களின் போது வீதி முழுவதும் வாழை மரங்கள் கட்டப்படுகின்றது. அதே சமயம் திருமண வீடுகளிலும் முக்கிய மக்கள் கூடும் விழாக்கள் என அனைத்திலும் முன்னோர்களின் காலத்தில் வாழைமரம் கட்டப்பட்டதற்கும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதற்கு பின்னால் வியக்க வைக்கும் அறிவியல் காரணம் உள்ளது.
No comments:
Post a Comment