Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் பணி நியமனத்துக்கு போட்டித் தேர்வை மட்டுமே நடத்த வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் மேலும் ஒரு போட்டி தேர்வை எழுத வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், 2 ஆயிரத்து 222 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், போட்டி தேர்வை நடத்த அனுமதிக்கும் அரசாணை 149-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே போட்டி தேர்வு நடத்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர் சங்க நிர்வாகி முனீஸ்வரி, நாளை முதல் தொடங்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்ப பதிவை புறக்கணிக்க உள்ளதாகவும், தங்களது போராட்டத்தை தொடர உள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment