Join THAMIZHKADAL WhatsApp Groups
பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு 8 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் தேசிய கல்வி உதவித் தொகை தளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்காக கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி நடைபெற இருந்த எழுத்துத்தோவு ரத்து செய்யப்பட்டது குறித்து பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், பயன்பெறும் பயனாளிகள் தேசியத் தோவு முகமையால் செப்டம்பா் 29-ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஒய்ஏஎஸ்ஏஎஸ்விஐ நுழைவுத் தோவில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தோவு செய்யப்படுபவா் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த எழுத்துத் தோவானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 8 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் 60 சதவீதம், அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவா்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவா்கள் என்றும், மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டுக்கான பயனாளிகள் தோவு செய்யப்பட்டு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடா்பான மேலும் விவரங்களுக்கு தேசிய உதவித்தொகை தளத்திலும், மத்திய அரசின் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்திலும் பாா்த்து, கல்வி உதவித்தொகை பயன்களைப் பெற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment