Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 24, 2023

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகளின் வரிசை முறை.!

நாம் உண்ணும் உணவுப் பட்டியலில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து என்று வெவ்வேறு வகையான உணவுகள் உள்ளன.

இதில் எந்த வகை உணவை, எந்த வரிசையில் எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து ரத்த சர்க்கரை அளவுகள் உயரும் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக நிலவுகிறது.

அந்த வகையில் முதலில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்றும், பிறகு புரதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பின்னர் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை சாப்பிட்டுவிட்டு, இறுதியாக மாவுச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வரிசை முறையை பலரும் வெகுவாகப் பரிந்துரை செய்கின்றனர்.

ரத்த சர்க்கரைக்கு உள்ள தொடர்பு :

சமூக வலைதளங்களில் வரக் கூடிய பரிந்துரைகளை எப்போதுமே பெரிதுப்படுத்த தேவையில்லை என்றாலும், உண்ணும் உணவு வரிசை முறைக்கும், ரத்த சர்க்கரை அளவுகளுக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான். மாவுச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக கொழுப்புச்சத்து உணவு மற்றும் புரத உணவுகளை எடுத்துக் கொண்டால் உண்மையாகவே மன நிறைவு கிடைக்குமாம்.


அதிலும், கொழுப்புச்சத்து, புரதம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்ட பிறகு, மாவுச்சத்து உணவுகளை சாப்பிட்டால் உண்மையாகவே உணவுக்குப் பிறகான சர்க்கரை அளவுகள் குறையுமாம். இருப்பினும், இந்த உணவு வரிசை முறை குறித்து கடந்த 2022ஆம் ஆண்டில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், உணவு வரிசை முறையை கடைப்பிடித்த சர்க்கரை நோயாளிகளின் ஹெச்பிஏ1சி முடிவுகள், பிளாஸ்மா குளுகோஸ், பிளாஸ்மா இன்சுலின் போன்றவற்றில் பெரிய அளவுக்கு மாற்றம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆகவே, பொதுவான கருத்தின்படி இதை நல்லது என்று வைத்துக் கொண்டாலும், இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

அதே சமயம், சர்க்கரை நோய் அல்லாதவர்கள் மிகுதியான உணவுக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால், அதனால் பசி அதிகரித்து தேவையற்ற உணவுகளை சாப்பிட வேண்டியிருக்குமாம். இருப்பினும், சில பொதுவான நடைமுறைகளை நாம் பின்பற்றலாம்.

சீரான உணவுமுறை :

மாவுச்சத்து மற்றும் இனிப்பு உணவுகளை குறைத்துவிட்டு நார்ச்சத்து உணவுகள், மெல்லிய புரத உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். முழு தானியங்கள், மெல்லிய இறைச்சி, பழங்கள், காய்கறிகள் மற்றும் நட்ஸ் சாப்பிடலாம்.

தினசரி உடற்பயிற்சி :

உடற்பயிற்சி செய்தால் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் குறையும். தினசரி குறைந்தப்பட்சம் 30 நிமிடங்களுக்காவது மிதமான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

திட்டமிட்ட உணவு :

ஒவ்வொரு நாளும் எந்த சமயத்தில் உணவு சாப்பிடுகிறோம், எந்த சமயத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறோம் என்ற நேரத்தை வரையறை செய்து, திட்டமிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். நேரம் தவறி சாப்பிடுவதால் தேவையற்ற சிக்கல் உண்டாகலாம்.

No comments:

Post a Comment