பண்டிகை காலத்தையொட்டி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ அறிவித்துள்ள சலுகைகளின்படி, மொபைல், மடிக்கணினி, தங்க நகைகள், மளிகைப்பொருட்கள், பர்னிச்சர்கள், ஃபேஷன் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 27.5 சதவீதம் வரை கேஷ்பேக் மற்றும் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையானது நவம்பர் 15ம் தேதி வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment