Join THAMIZHKADAL WhatsApp Groups
சுகர் பேஷண்ட்ஸ் எப்போதும் நாம் எடுத்துகொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில் சுகர் பேஷண்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கு இந்த பானங்களை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
எலுமிச்சை தண்ணீர்
சூடான தண்ணீரில் எலிமிச்சை சேர்த்து குடித்தால், உடலில் உள்ள நஞ்சு பொருட்கள் வெளியாகும். மேலும் உடல் எடை குறைக்க உதவும்.
பாகற்காய் ஜூஸ்
இதில் உள்ள சத்துகள், இன்சுலின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும். ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
வெந்தயத் தண்ணீர்
இதில் நார்சத்து அதிகம் உள்ளது. இவை ரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. தண்ணீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்துவிட்டு, அதை வடிகட்டி காலையில் குடிக்கலாம்.
நெல்லிக்காய் ஜூஸ்
இதில் வைட்டமின் சி உள்ளது. இது ரத்த சர்க்கரையை சீராக வைத்துகொள்ள உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கற்றாழை சாறு
இது போலிவான சருமத்தை கொடுக்க உதவுகிறது. இதில் ஹைப்போகிளைசிமிக் பண்புகள் உள்ளது. இதனால் இதை நாம் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்த சர்க்கரை சீராக இருக்கும்.
துளசி டீ
இதில் சர்க்கரை நோய்க்கு எதிரான பண்புகள் உள்ளது. இதை நாம் குடிக்கும் டீயில் சேர்த்து குடித்தால் ரத்த சர்க்கரை குறையும்.
No comments:
Post a Comment