Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 8, 2023

வாய் துர்நாற்றம் முதல் வாயுத்தொல்லை வரை - ஒரே ஒரு ஏலக்காயில் தீர்வு!

து எந்த டீயாக இருந்தாலும், அதில் ஒரே ஒரு ஏலக்காயை மட்டும் சேர்த்துப்பாருங்கள். டீயின் சுவை அள்ளும்.

கூடுதலாக ஆரோக்கியமும் கிடைக்கும். ஏலக்காயில் உள்ள நன்மைகள் என்ன என்று தெரிந்துகொளுங்கள்.

செரிமானத்துக்கு உதவுகிறது

செரிமானம் பாரம்பரியமாக செரிமானத்துக்கு உதவக்கூடிய ஒரு உணவுப்பொருள். அது அஜீரணத்தின் அறிகுறிகளைப்போக்கி ஜீரணத்தை போக்கக்கூடியது. வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்றவற்றையும் நீக்குகிறது. எனவே உணவு எடுத்துக்கொண்ட பின்னர் ஏலக்காய் கலந்த தேநீர் பருகுவது ஜீரணத்தை தூண்டி, வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.

வீக்கத்து எதிரான வேதிப்பொருள் உள்ளது

ஏலக்காயில் வீக்கத்துக்கு எதிரான வேதிப்பொருள் நிறைந்துள்ளது. உடலில் எங்கு வீக்கம் இருந்தாலும் அதை குறைக்க உதவுகிறது. மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலிகளை குறைக்க உதவுகிறது. எனவே பெண்கள் ஏலக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது கட்டாயம்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ஏலக்காயில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது மனஅழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலை பாதுகாத்து, நீண்ட கால நோய்கள் வராமல் தடுக்கிறது.

சளி, இருமலை போக்குகிறது

சளி மற்றும் இருமலுக்கு இது ஒரு இயற்கை தீர்வாக உள்ளது. மூச்சு பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது. இந்த ஏலக்காயில் உள்ள வாசம், மூச்சுக்கோளாறுகளை போக்க உதவுகிறது. மேலும் மூக்கடைப்பு ஏற்பட்டு, மூக்கில் இருந்து ரத்தம் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூச்சு திணறல் ஏற்படாமல் தடுக்கிறது. ஒட்டு மொத்த சுவாசமண்டல ஆரோக்கியத்துக்கும் ஏலக்காய் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஏலக்காயில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

மனஅழுத்தம் குறைக்கிறது

ஏலக்காயின் வாசமே மன அழுத்தத்தை குறைக்கும். ஏதேனும் இனிப்பு செய்துவிட்டு அதில் ஏலக்காய் தூவினால் அந்த வாசமே நம் மனதுக்கு இதமளிப்பதாக இருக்கும். நீங்கள் தேநீரில் ஏலக்காய் சேர்க்கும்போது, அது தேநீரின் சுவையை கூட்டுவதுடன், தேநீருக்கு நல்ல மணத்தையும் கொடுக்கிறது. காலை முதலில் இதமான இந்த தேநீரை பருகுவது, மனஅழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றை போக்குகிறது. மன ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கிறது.

வாய் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது

ஏலக்காயில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் வேதிப்பொருட்கள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதனால் வாய்துர்நாற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. பற்களில் சொத்தை ஏற்படுவதை தடுக்கிறது. வாயில் நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுக்கிறது.

கல்லீரலை பாதுகாக்கிறது

ஆயுர்வேத மருத்துவத்தில் ஏலக்காய் உடலை சத்தப்படுத்தும் வேலையை செய்வதாக கருதப்படுகிறது. ஏலக்காய் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவுவதாக பல்வேறு ஆராய்ச்சிகளும் தெரிவித்துள்ளன. ஆல்கஹால் பருகாதவர்கள், ஃபேட்டி லிவர் பிரச்னை இருக்கும்போது ஏலக்காய் சாப்பிட்டு வர அவர்களுக்கு பிரச்னை குறைந்து கல்லீரல் பாதுகாப்பு அதிகரித்து வருவது ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. எனவே ஒரே ஒரு ஏலக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள மறக்காதீர்கள்.

No comments:

Post a Comment