Join THAMIZHKADAL WhatsApp Groups
தாமதமான உணவு பழக்கம், புளிப்பு மற்றும் காரணம் நிறைந்த உணவுகள் ஆகியவை உண்பதினால் அல்சர் பிரச்சனை ஏற்படும்.
இந்த பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரி செய்வது மிகவும் முக்கியம்.
இந்த பிரச்சனைக்கு தண்ணீர் நிறைந்த பழங்கள், தயிர், மோர், அதிக காரம் மற்றும் புளிப்பு இல்லாத உணவு போன்றவற்றை எடுத்து வருவதன் மூலம் நல்ல தீர்வு காண முடியும். அதேபோல் அல்சர் பாதிப்புக்கு அதிமதுரம் உரிய பலனைக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:-
அதிமதுர பொடி - 1 தேக்கரண்டி
காய்ச்சிய பசும் பால் - 1 டம்ளர்
பனங்கற்கண்டு - சிறிதளவு (அல்லது ) கருப்பட்டி
செய்முறை:-
முதலில் ஒரு கிளாஸ் எடுத்து அதில் அதிமதுர பொடி 1 தேக்கரண்டி, சிறிதளவு பனங்கற்கண்டு மற்றும் காய்ச்சிய பசும் பால் 1 டம்ளர் அளவு எடுத்து மூன்றையும் நன்றாக கலக்கி பொறுமையாக குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் அல்சர் பாதிப்பு முழுமையாக நீங்கி விடும்.
மேலும் வாய் மற்றும் வயிற்றில் புண் இருப்பவர்கள் அதிக காரம் மற்றும் சூடான உணவை தவிர்த்தல் நல்லது. இந்த அதிமதுர பால் வாய்ப்புண், வயிற்று புண், ஆஸ்துமா, கபம் சுரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது.
No comments:
Post a Comment