Join THAMIZHKADAL WhatsApp Groups
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் ஒவ்வொரு செயல்பாடும் 12 ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு சில கிரகத்தின் இடமாற்றமானது மிகவும் பெரிதாக பார்க்கப்படுகிறது. இடமாற்றத்தின் போது சில ராசிகளுக்கு, அசுப பலன்களும் சில ராசிகளுக்கு சுப பலன்களும் கிடைக்கும். ராகு கேது, சனி, சூரியன், சுக்கிரன், குருபகவான் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
நவக்கிரகங்களில் பாவ கிரகங்களாக ராகு மற்றும் கேது உள்ளனர். அனைவரும் கண்டு அச்சப்படும் கிரகங்கள் ராகு மற்றும் கேது தான்.இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் இணைபிரியாமல் வக்ர நிலையில் பயணம் செய்வார்கள். அக்டோபர் 30ஆம் தேதி அன்று ராகு பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைய உள்ளார். இதனால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
கும்ப ராசி
எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் உங்களைத் தேடி வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கு புதிய வழிகள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் வெற்றியை தேடி தரும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
ரிஷப ராசி
வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமான ஆதாயங்கள் உண்டாகும். புதிய முதலீடுகள் வெற்றியை பெற்று தரும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும்.
கடக ராசி
செலவுகள் குறைந்து வருமானங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தேடித் தரும். வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கலும் இருக்காது. தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
No comments:
Post a Comment