Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 9, 2023

காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரக நீரைக் குடித்தால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நிகழும் தெரியுமா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நம் வீட்டு சமையலறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களைக் கொண்ட ஏராளமான பொருட்கள் உள்ளன.

அதில் ஒன்று தான் கருஞ்சீரகம். இந்த கருஞ்சீரக விதைகளானது பழங்காலம் முதலாக நாட்டு மருத்துவத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த கருஞ்சீரக விதைகள் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளன. முக்கியமாக கருஞ்சீரக விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது ப்ரீ ராடிக்கல்களால் உடலில் உள்ள செல்களில் ஏற்படும் சேதத்தைத் தடுத்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது. மேலும் கருஞ்சீரக விதைகளில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

இந்த கருஞ்சீரக விதைகளை தினசரி உணவில் சிறிது சேர்த்து வந்தால், அது பல நோய்களின் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது. இப்படிப்பட்ட கருஞ்சீரக விதைகளை பலவாறு உணவில் சேர்க்கலாம். அதுவும் கருஞ்சீரக விதை நீரைக் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் பல அற்புதங்கள் நிகழும். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.

1. கொலஸ்ட்ரால் குறையும்

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எளிய வழியில் குறைக்க விரும்பினால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் கருஞ்சீரக நீரைக் குடியுங்கள். ஆய்வு ஒன்றில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை ஒரு வருடம் தொடர்ந்து உட்கொண்டு வந்ததில், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க சிறந்த வழி கருஞ்சீரக நீரைக் குடிப்பது தான்.

2. புற்றுநோயைத் தடுக்கப்படும்

கருஞ்சீரகத்தில் அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. பொதுவாக ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதம் தடுக்கப்பட்டு, நாள்பட்ட நோய்களின் அபாயமும் தடுக்கப்படும். முக்கியமாக புற்றுநோயின் ஆபத்து குறையும். அதுவும் கருஞ்சீரக நீரை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது, அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.

3. பாக்டீரியாக்கள் அழியும்

கருஞ்சீரக விதைகளில் ஆன்டி-பாக்டிரியல் பண்புகள் உள்ளன. கருஞ்சீரக நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அடிக்கடி குடிக்கும் போது, அது உடலைத் தாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சித் தடுத்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும்.

4. இரத்த சர்க்கரை சீராகும்

கருஞ்சீரகம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவி புரியும். கருஞ்சீரக நீரைக் குடித்து வருவது இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுவதோடு, உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உங்களுக்கு இரத்த சர்க்கரை அதிகமாக இருந்தால், கருஞ்சீரக நீரைக் குடியுங்கள்.

5. உடல் எடை குறையும்

உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் கருஞ்சீரக நீரைக் குடியுங்கள். ஏனெனில் கருஞ்சீரகம் உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. அதுவும் இந்நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, சிறப்பான பலனை விரைவில் காணலாம்.

கருஞ்சீரக நீரைத் தயாரிப்பது எப்படி?

* இரவு தூங்கும் முன், ஒரு டம்ளர் நீரில் 8-10 கருஞ்சீரக விதைகளை தட்டிப் போட்டு, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* விருப்பமுள்ளவர்கள், இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் இன்னும் இருமடங்கு நற்பலனைப் பெறலாம்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top