Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 21, 2023

உடலில் இருக்கும் அதிகப்படியான யூரிக் அமிலத்தை இயற்கை முறையில் குறைக்கும் சில எளிய வழிகள்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
யூரிக் அமிலம் என்பது இயற்கையான கழிவுப் பொருளாகும். இந்த பொருள் பியூரின்கள், சில உணவுகள் மற்றும் பானங்களில் காணப்படுகிறது.

நம் உடல் இதை உடைக்கும் போது யூரிக் அமிலமானது உருவாகிறது. இந்த கழிவுப் பொருளான யூரிக் அமிலம் பிறகு இரத்தத்தில் கலந்து சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும்.

சிறுநீரால் இது திறம்பட அகற்ற முடியாத போது யூரிக் அமிலம் இரத்தத்தில் படிந்து பல வித பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இந்த யூரிக் அமில படிகங்களால் கீல்வாத பிரச்சினைகள் ஏற்படலாம். சரி வாங்க இந்த யூரிக் அமிலத்தை எப்படி இயற்கையான முறையில் குறைக்கலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

யூரிக் அமிலத்தை இயற்கையான முறையில் குறைக்க வழிகள்:

யூரிக் அமில அளவை குறைக்க மருந்துகள் உதவியாக இருக்கும். எனவே மருத்துவரின் பரிந்துரை பேரில் நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டு வரலாம். அப்படி இல்லையென்றால் கீழே உள்ள இயற்கையான வழிகளை நீங்கள் பின்பற்றி வரலாம். சரி வாங்க இந்த இயற்கையான வழிகளை பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

உங்கள் இரத்தத்தில் நிறைய அளவு யூரிக் அமிலம் கலந்து இருந்தால் முதலில் நிறைய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் நிறைய அளவு தண்ணீர் குடிக்கும் போது உங்கள் உடலானது யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது நீங்கள் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதிக பியூரின் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்

அதிகளவு பியூரின் கொண்ட உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். பியூரின் கொண்ட உணவுகளான கீரைகள், பட்டாணி, பீன்ஸ் மற்றும் பருப்பு போன்ற காய்கறிகளிலும், இறால், நெத்திலி போன்ற கடல் உணவுகளையும் இறைச்சி போன்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இதில் அதிகளவு பியூரின் காணப்படுகிறது. எனவே இந்த பியூரின் உணவுகளை தவிர்த்து வந்தாலே உங்கள் இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் குறைந்து விடும்.

சரிவிகித உணவை எடுத்துக் கொண்டு வாருங்கள்

அதிக பியூரின் உணவுகளை தவிர்ப்பது மட்டுமல்லாமல் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொண்டு வாருங்கள். ஏனெனில் இந்த சரிவிகித உணவுகளும் உங்கள் யூரிக் அமில அளவை குறைக்க பயன்படுகிறது. குறிப்பாக வைட்டமின் சி அடங்கிய பழங்கள் உங்கள் யூரிக் அமில அளவை வெகுவாக குறைத்து விடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்

மது அருந்துதல் உங்கள் யூரிக் அமில அளவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது இரத்தத்தில் யூரிக் அமில அளவை அதிகரித்து உங்களுக்கு கீல் வாத பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே மது அருந்துவதை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

உடல் எடை குறைதல்

நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் யூரிக் அமில அளவு அதிகரித்து கீல்வாத பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே உணவு மற்றும் எடை மூலம் யூரிக் அமில அளவை நீங்கள் குறைக்க முடியும். உடற்பயிற்சி செய்து நீங்கள் கீல்வாத அபாயத்தை குறைக்க முடியும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்

தினந்தோறும் ஒரு 30 நிமிடங்களாவது தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். காரணம் உடற்பயிற்சி செய்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. விறுவிறுப்பான நடைபயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது நல்லது.

யூரிக் அமில அளவை குறைக்க இயற்கை உணவுகள்:

* செர்ரி ஜூஸ் - செர்ரி ஜூஸ் குடிப்பது உங்கள் யூரிக் அமில அளவை குறைக்க பயன்படுகிறது. இதன் மூலம் நீங்கள் கீல் வாதத்தை தடுக்க முடியும்.

* இஞ்சி - இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது கெளட் பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

* ஆப்பிள் சிடார் வினிகர் - ஆப்பிள் சிடார் வினிகர் யூரிக் அமில அளவை குறைக்க பயன்படுகிறது.

* மஞ்சள் - மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கெளட் பிரச்சினையை போக்க உதவுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News