Thursday, October 19, 2023

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த "நித்திய கல்யாணி தேநீர்"!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.

பிறந்த குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது என்பது தான் வேதனையின் உச்சம்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பரம்பரை வியாதி என்று சர்க்கரை நோய் உருவாகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பது அவசியம். இனிப்பு பண்டங்கள் பழக்கம் தலை வைத்து கூட படுத்து விடக்கூடாது.

அதோடு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். இதற்காக நாம் அதிகளவு மாத்திரைகளை உண்டு வருகிறோம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகம் பாதிக்கப்படும். மாத்திரையே உணவு என்ற நிலை உருவாகி விடும். இதனால் சில இயற்கை வழிகளை பின்பற்றினாலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அந்த வகையில் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் நித்திய கல்யாணி பூவில் தேநீர் செய்து பருகி வருவதன் மூலம் அந்த பாதிப்பை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:-

*நித்திய கல்யாணி பூ - 10

*தண்ணீர் - 1 1/4 கிளாஸ்

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 10 நித்திய கல்யாணி பூவை போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பூவின் நிறம் கொதிக்கும் நீரில் முழுவதுமாக இறங்கியதும் அடுப்பை அணைக்கவும்.
பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி வெது வெதுப்பான சூட்டில் பருகவும்.

இவ்வாறு காலை மாலை என்று இரு வேலைகளிலும் பருகி வருவதன் மூலம் உடலில் உள்ள சர்க்கரை நோயின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News